Description
சீதாஷ்ண நிலைகள், விளைபொருள் வேறுபாடுகள், கலாச்சார மாறுபாடுகள் இவை தாண்டி உலக வேளாண்மை சந்திக்கக் கூடிய அந்த ஒரு புள்ளியை இந்த நூலின் வழி ஆசிரியர் காட்டியுள்ளார் என்று சொல்லலாம். தெக்குப்பட்டின் வெற்றிக்கதை தமிழகம் முழுவதற்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். தெரிவதற்கு அரசுதான் ஆவன செய்ய வேண்டும். ஊடகங்கள் உறுதுணை செய்ய வேண்டும். தமிழக அரசின் வேளாண்மை திட்டத்தின் அத்தியாவசிய அங்கமாக நீர்மேலாண்மை அமைய வேண்டிய அவசியம், அவசரம் இருக்கிறது. இது நடந்தால் நடக்க வேண்டும் – வேளாண்மை குறித்து இன்றைய பெரிய கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை இந்த நூல் சொல்லுகிறது.
முக்கியமாக யாருக்கெல்லாம் இந்த நூல் உதவியாக இருக்கும் என்றும் சொல்ல விரும்புகிறேன். ஒன்று புதிய அரசு திட்டங்களை அறிமுகம் செய்யும் ஆற்றல் கொண்ட அரசியல் தலைவர்கள், இரண்டு வளர்ச்சி திட்டங்களை திட்டமிடும் அரசு அலுவலர்கள், மூன்று வருங்கால இந்தியாவை செதுக்க இருக்கும் இளைஞர்கள், மாணவர்கள், குறிப்பாக பெண்கள்.
Reviews
There are no reviews yet.