Description
சார்பு ஆய்வாளர்கள் / காவல் ஆளினர்கள் போட்டித் தேர்வுகளில்
பங்கு பெறுவோருக்கான வழிகாட்டி நூல்
அன்பார்ந்த காவல் துறை நண்பர்களே,
தமிழ்நாடு காவல் துறையின் அமைப்பு, நிர்வாகம் மற்றும் கடமைகள் பற்றிய அறிவுரைகளடங்கிய தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் தொகுதி&1, 2019 வரை திருத்தப்பட்ட பதிப்பிலிருந்தும் இந்நூல் தொகுத்து வரையப்பட்டுள்ளது மற்றும்
2023 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட குற்றவியல் முப்பெரும் சட்டங்கள் பதிப்பிலிருந்தும் காவல் நிலையங்களின் அன்றாட அலுவல்களிலும், உயரலுவலர்கள் காவல் நிலையங்களை பார்வையிட மற்றும் ஆய்வு செய்யும் தருணத்திலும் காவல் நிலையப் பொறுப்பு அலுவலர்களுக்கு இந்நூல் மிக்க உதவியாக அமையும்.
காவல்துறைக்கு நேரடியாகத் தேர்வு செய்யப்படும் சார்பு ஆய்வாளர்களில் 20 விழுக்காடு, துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவோருக்கும் இந்நூல் உறுதுணையாக அமையும். மேலும் சென்னை உயர்காவல் பயிற்சியகத்தில் அடிப்படைப்பயிற்சி பெறும் நேரடியாகத் நியமனம் செய்யப்பட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், குறுகிய காலப் பயிற்சி பெறும் இந்தியக் காவல் பணி உதவி காவல் கண்காணிப்பாளர்கள், நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல் சார்பு ஆய்வாளர்கள், 9 வார கால பதவி உயர்வு பயிற்சி பெறும் சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அடிப்படைப் பயிற்சி பெறும் இரண்டாம் நிலைக் காவலர்கள் ஆகியோருக்கு வகுப்பறையிலும், தேர்வுகளுக்கு தயார் செய்யவும் மற்றும் களப்பணியிலும் இந்நூல் வழிகாட்டியாக அமையும்.
பொதுவாகக் காவல் துறையில் பணிபுரியும் அனைத்து பதவி நிலை அலுவலர்களும், குறிப்பாக பயிற்சியாளர்களும் ஆங்கிலம் மற்றும் தமிழில் அமைந்துள்ள இந்நூலை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
இந்நூலில் கண்டுள்ள காவல் நிலையப் பதிவேடுகள் தமிழ்நாடு காவல் நிலை ஆணை தொகுதி 1ன் பல்வேறு அத்தியாயங்கள் மற்றும் ஆணை எண்களில் அளிக்கப்பட்டிருந்தாலும் அவற்றைத் தொகுத்து சுலபமான பார்வைக்கு வழங்கியுள்ளேன். இந்நூலை செம்மையாக அச்சிட்டு உருவாக்கி உங்கள் கைகளில் தவழச் செய்த எனது உறவினரும், நலம் விரும்பியுமான திரு.ழி.ரமேஷ் குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இந்நூலில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது நீக்கங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால் அதுபற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. வாழ்த்துக்களுடன்…
ஷி. முருகானந்தம்
சென்னை&-127
Reviews
There are no reviews yet.