Description
தமிழ்ச் சிறுகதை உலகில் முன்னோடி என்று
போற்றப்படும் புதுமைப்பித்தன் தன் வாழ்நாளை இந்த சமூக கட்டமைப்புகளையும் யதார்த்த வாழ்க்கையும் அழகாக படைப்புகளாக பதிவு செய்திருக்கிறார். இவை அனைத்து அனுபவங்கள் என்று சொல்ல முடியாது எனினும் பிறருடைய அனுபவங்களாகவும்
அது இருக்கிறது. தன் வாழ்நாளில் நீண்ட நெடிய
துயரங்களையும் துக்கங்களையும் வறுமையையும் தாண்டி இப்படியான படைப்புகளை உருவாக்கும் தைரியமும் மனோநிலையும் அவருக்கு
இருந்திருக்கிறது. உலகளவில் பேசப்படும் இந்த படைப்பு நம் கைகளில் இன்று தவழ்ந்து வருகிறது.
அவருடைய அத்தனை எழுத்துகளிலும் உள்ள பல்வேறு சமூகச் சூழல்கள், பல்வேறு கதாப்பாத்திரங்கள், அவருக்கு உரித்தான மொழி நடை என அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து
சிலாகித்து வருகிறார்கள் இன்றைய வாசிப்பாளர்கள்.
எழுத்தும், வாசிப்பும்தான் இன்றைக்கு இருக்கிற பயிற்சிகளின் முக்கியமானது; வலிமையானது என்பதை உலகம் உணர்ந்துகொண்டிருக்கிற நேரத்தில் இந்ந நூலை பல்வேறு தரப்பிற்கிடையே பல்வேறு சூழல்களுக்கிடையே கொண்டு சேர்ப்பதுதான் தமிழகுக்கு எழுத்தாளர்களுக்கு இன்றைய இளைய தலைமுறையினருக்கும் செய்யும் பரிகாரம் என்ற நல்ல எண்ணத்தில் இந்த நூலை வெளிக்கொணர்கிறேன்.
ந.ரமேஷ் குமார்
பதிப்பாசிரியர்
Reviews
There are no reviews yet.