Description
கலைஞரைப் பற்றி இதுவரை பல நூல்கள் வெளியாகி இருந்தாலும், இந்நூலின் சிறப்பே தனி.
கலைஞர், முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலரையும் சந்திக்கும் அனுபவம் கொண்டவரான மூத்த பத்திரிகையாளர் மணா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதோடு பலவற்றைத் தொகுக்கவும் செய்திருக்கிறார்.
கலைஞருக்குப் பிடித்தமானதாக அவரால் பாராட்டப்பெற்ற கலைஞரின் ‘நதிமூலம்’ துவங்கி, அவருடனான சிறப்புச் சந்திப்புகள், சென்னையில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு வெளிவந்த கலைஞர் அளித்த ஆவேசமான பேட்டி, ‘தீராநதி’ இதழுக்காக கலைஞர் அளித்த வித்தியாசமான விரிவான நேர்காணல், கலைஞர் கைதான அன்று அவருடைய குடும்பத்தினர் அனுபவித்த சித்திரவதைகள், அப்போது ஸ்டாலின் அளித்த உஷ்ணமான பேட்டி, முரசொலி மாறன், கனிமொழி சந்திப்புகள், அன்பழகன் மற்றும் துரைமுருகன், தென்னன் போன்றவர்களின் கலைஞரைப் பற்றிய நினைவுகள் என்று திருக்குவளை துவங்கி இராஜாஜி மண்டபத்தில் அவர் வைக்கப்பட்டிருந்த அன்று நடந்தவை உட்பட கலைஞரின் வாழ்வின் பல நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருப்பதுடன்,
‘கலைஞர் என்னும் மனிதர்’ என்கிற நெகிழ்வான கட்டுரையுமாக நூலின் முதற்பகுதியைத் தன்னுடைய நேரடி அனுபவத்தில் எழுதித் தொகுத்திருக்கிறார் மணா.
Reviews
There are no reviews yet.